ஆறுதல்

மரண அறிவித்தல்

சாந்தமலர் ஞானசேகரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாந்தமலர் ஞானசேகரம்

வயது 5712 மே, 1962 – 10 ஜூன், 2019

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
Dietikon

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Dietikon(ZH) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தமலர் ஞானசேகரம் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் சின்னக்கிளி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கணபதி, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நரேஸ்கண்ணா(சுவிஸ்), ஞனசன்(சுவிஸ்), சஜாந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி(இலங்கை), பொன்னுத்துரை(இலங்கை), சிவராசா(இலங்கை), தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன்(ஜெகன்- ஜேர்மனி), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஜெகரூபன்(ரூபன்- ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெகரூபி, ஜெகநீதன்(ஜேர்மனி), அபிநயா(இலங்கை), சமி(சுவிஸ்) காலஞ்சென்ற தர்மகுலராஜா ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

சுகாசினி(சுவிஸ்), ராதிகா(ஜேர்மனி), சிந்து(ஜேர்மனி), ராதா(சுவிஸ்), கௌதமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கர்ணராஜா(கனடா), வரதராஜா(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை), ஞானாம்பி(இலங்கை), செல்வி(ஜேர்மனி), தர்மவதி(இலங்கை), குணமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவி(கனடா), தாரணி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பிரபு, காலஞ்சென்ற தீபன், காசன்(சுவிஸ்), பிரதீபா(இலங்கை), நிலான்(ஜேர்மனி), ஜெயந்தி(பெல்ஜியம்), தவேந்தினி(ஜேர்மனி), சர்மினி(இலங்கை), சங்கீதன்(இலங்கை), சஞ்சயன்(இலங்கை), சிந்துஜா(இலங்கை) சுபாசினி(சுவிஸ்), சுகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,

பேபி, குணமலர்(இலங்கை), செல்வகுமார் கிருஸ்ணகுமாரி(குமார், ஜானகி- Sursee சுவிஸ்) ஆகியோரின் சம்பந்தியும்,

ஜெரான், ராஜோஸ், ஜெனீஷா, ஜெசின், அஸ்வினா, ஜெய்சன் சாய், சாரூ, தரன்ஜா, நந்து, ஆதவன், சௌமியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த இமையாணன் உடுப்பிட்டியில் 12/May/1962 இல் திரு திருமதி.சீனியர் சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகளாக சாந்தமலர் அவர்கள் பரமேஸ்வரி, பொன்னுத்துரை, சிவராசா, தவராசா எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி கணபதி பவளம் தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான கணபதி ஞானசேகரம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக நரேஸ்கண்ணா, ஞனசன், சஜாந் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.06.2019 இல் 57 வயதில் சுவிஸில் உள்ள Dietilkon(zh) நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்னை மனமே
.......அன்பு உள்ளமே
இன்னல் போக்கும்
.......இன்ப குணமே
வெண்மை மலரே
....... வேத வார்த்தையே
அன்பு உருவே
.........அகிலம் துறந்தீரே "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.