1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரகுமார் பாலசுப்பிரமணியம்
வயது 562 ஜனவரி, 1963 – 10 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடி மறைந்ததுவோ
தங்கள் நினைவுகள் மட்டும் நிறைகிறதே
வேண்டுதல் இன்னும் குறையவில்லையே
உங்கள் ஆசைமடி வேண்டி நிற்கின்றோம்
விழிகள் மீண்டும் ஒருமுறை காணுமோ
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
மனைவி பிள்ளைகள் சொந்தங்களோடு
சேர்ந்த்திருக்க மறந்து
நீங்கள் சென்றதேனோ
எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு...!
ஆண்டு ஒன்று எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எமது மனம் ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சிறுவிளானில் 02/JAN/1963 இல் திரு.திருமதி பாலசுப்பிரமணியம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சந்திரகுமார் அவர்கள் இவ் அழகு நிறைந்த தீவில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சுசிகலா, சசிகலா, சூரியகுமார், சுரேஸ்குமார், சிவகுமார், சூரியகலா, சக்திகலா, செந்தில்குமார் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் பரந்தன் திரு.திருமதி தர்மஞானசிங்கம் பூபதி தம்பதிகளின் அன்பு மகள் பிறேமலதா(லதா) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தமிழினி, மகிழினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் சந்தி என அன்பாக அழைக்கப்படும் இவர் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.08.2019 இல் 56 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
மீசை உறவே........... மிடுக்கான மனிதனே
ஆசை மனமுடன்.......... அன்புடன் கனடாவில்
வேசம் போடாது.......... மகிழ்வுடன் வாழ்ந்த
பாச உறவே......... பிரிந்தீரே எமை விட்டு
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

