மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியாப்பிள்ளை ஞானறாஜா தம்பு
வயது 6229 ஜனவரி, 1956 – 11 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- New Jersey
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை ஞானறாஜா தம்பு அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
இவர் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் பயின்று, பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரசாயன சிறப்புப் பட்டதாரியானவர். அமெரிக்காவில் மேற்படிப்பைத் தொடர்ந்து ஒகாயோ போர்லிங் க்ரீன் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், யூனிவெர்சிட்டி-ஒப்-மினசோட்டாவில் வேதியியலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார், பென்சில்வேனியா லீ ஹைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை ஞானம்மா தம்பு தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்டீபன் சூரவீரா, காலஞ்சென்ற பகவதி ஸ்டீபன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சுமித்ரா, நித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவறாஜா தம்பு, சோதி அலி, அஞ்சலீனா செல்வறாஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டிலன் பிறேமச்சந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

