மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கந்தையா
வயது 8520 மார்ச், 1935 – 25 மார்ச், 2020
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம், Gelsenkirchen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், ஜேர்மனி Gelsenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தையா அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
குலசிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற தியாகராஜா, இதயராணி(ஜேர்மனி), நந்தகோபாலன்(ஜேர்மனி), யகுல தர்மராஜா(பிரான்ஸ்), தவகுலராணி(ஜேர்மனி), ரஞ்சிதராணி(இலங்கை), குலோசனராணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமலராணி(கனடா), அன்னலட்சுமி(இலங்கை), பரமலிங்கம்(ஜேர்மனி), சந்திரகலா(ஜேர்மனி), மேரிமடோனா(பிரான்ஸ்), திருச்செல்வம்(ஜேர்மனி), தேவராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னலட்சுமி, சரோஜினிதேவி, பத்மநாதன், தில்லைநாதன், சத்தியதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விகிதா, கவிதா, தருணிகா, சோபாலினி, கீர்த்திகா, சன்னதி, செளம்யா, அஸ்விகா, அர்ச்சயா ஜெனீவன், அனிஸ்டன், ஜெனிபர், அபினா, தினோஜா, அகிர்யன், சிவராஜ், தனுஜன், ஜினுஜன் ஆகியோரின் பேரன்புப் பேத்தியும்,
ஆதித்தனா, யுகாக்சனா, சஷ்வின், ஆகியோரின் பாசத்திற்குரிய பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இந்துமா கடலினுள் அலைக்கரம் உயர்த்தித் தாலாட்டி இசைக்கின்ற அழகிய தீவாம் நெடுந்தீவில் 20-03-1935 யில் செல்லையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியாக சரஸ்வதி அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் அன்னலட்சுமி, சரோஜினிதேவி, பத்மநாதன், தில்லைநாதன், சத்தியதேவி ஆகிய அன்பு உடன் பிறப்புகளுடன் கூடிக் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும், இராமு நாகாத்தை தம்பதிகளின் அருமை மகனான கந்தையா என்பவரைத் திருமணம் முடித்து மகிமை பொருந்திய மருதநிலமாம் உருத்திரபுரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து குலசிங்கம், தியாகராஜா, இதயராணி, நந்தகோபாலன், யகுல தர்மராஜா, தவகுலராணி, ரஞ்சிதராணி குலோசனராணி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
சரஸ்வதியெனும் பெயரிற்கேற்ப மிகச் சிறந்த கல்வியாளராக வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று சக மனிதரிடம் காட்டும் அன்பும் பரிவும் புரிந்துணர்வும் தான் மானிடமேன்மை என்று வாழ்ந்த நல்ல அன்னை . உருத்திரபுர மாதர் சங்கத்தின் முன்னோடியாக நின்று உழைத்தவர். தையல், கைத்தறி நெசவு, பன்னவேலை போன்றவற்றைப் பழகி தான் பழகியவற்றைப் பிறர்க்கும் பயிற்றுவித்து வந்த உன்னதர்.
இணக்கசபை உறுப்பினராக இருந்து எல்லோர் மனங்களையும் கவர்ந்தவர். தன் புன்னகையால் எல்லார் உள்ளங்களையும் கவர்ந்த உத்தமி.
இறுதியாக வாழ்ந்த ஜேர்மனியிலும் ஆன்மீகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர். உறவுகளை அன்போடும் வாஞ்சையோடும் அரவணைத்த உன்னதமான அந்த அன்னையார் பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்தவர். 25-03-2020யில் தனது 85வயதில் ஜேர்மனி நாட்டின் Gelsenkirchen நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

