ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சரஸ்வதி இரத்தினசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி இரத்தினசிங்கம்

வயது 8622 அக்டோபர், 1930 – 2 ஜனவரி, 2017

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் சரஸ்வதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்பே உருவான எங்கள் அன்புத் தெய்வமே, எம் அன்னையே
என்றும் எங்கள் நினைவோடும், வாழ்வோடும் கலந்து இருப்பீர்கள்!
உங்கள் அன்புப் பேராற்றலினால் எம்மை வழிநடத்தினீர்கள்
இனி ஓர் பிறப்பில்லை, தூய ஆத்மாவாக என்றும் நிலைத்திருப்பீர்கள்!

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுப்பையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்வலட்சுமி, பாக்கியலட்சுமி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, அருளானந்தம், கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சிதபவானி, ராஜதுரை, உருத்திரா, காலஞ்சென்ற பாஸ்கரன், மற்றும் பீதாகரன், பாலா, காலஞ்சென்ற சந்திரகுமார், மற்றும் சுசீலா, சிறீகரன், ஜீவாகரன், சுதர்சன், பிறேமா, சர்மா ஆகியோரின் பாசமிகு பெறாத்தாயாரும்,

வசந்தி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும், மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கும், மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் சகலவழிகளிலும் உதவியவர்களுக்கும் இன்னும் பலவழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 02-02-2017 வியாழக்கிழமை அன்று 106/4, ஆனந்தன் வடலி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.