மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி திருவேங்கடம்
வயது 9025 ஜூலை, 1929 – 8 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காரைநகர் வலந்தலை, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் வலந்தலையை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி திருவேங்கடம் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருவேங்கடம் அவர்களின் அன்பு மனைவியும்,
திலகவதி, வனிதாதேவி, அரியமலர், சுலோயனா, சந்திரசோதி, வசந்தா, சாந்தா, சசிரேகா, ஸ்ரீலதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, செல்வசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், விபுலானந்தன் மற்றும் குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், சித்திரா, றொபர்ட், சுத்தானந்தன், வரேந்திரன், மனோராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவரூபன், சிவறமணன், சிவகங்கா, மீரா, அரவிந்தன், சங்கீத்தா, சர்மிதா, சஞ்சயன், திலீபன், நிருஜா, நிரூபிகா, லக்ஷிகா, செந்தூரன், ஜனனி, செழியன், சுகன்ஜன், உமேஸ், சிவனுஜா, சஞ்சீவ், சிந்துஜா, ராகவி, ராகுல், காலஞ்சென்ற வானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவானிக்கா, சிவான்ஜலி, விஹாலி, சக்தி, சைந்தவி, தியானா, அனீஷ், அஜீஷ், ஆர்த்திக், சயன், சஞ்சிகா, அனாக்கா, அபிக்கா, ஒலிவியா, ஜோனத்தன், ஈத்தன், யமுனா, கனீஷ், மிகிலேஷ், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 25/JUL/1929 இல் திரு.திருமதி கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளான சரஸ்வதி அவர்கள் மகேஸ்வரி,செல்வசிங்கம் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அழகிய ஆண் அழகான திருவேங்கடம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக திலகவதி, வனிதாதேவி, அரியமலர், சுலோயனா, சந்திரசோதி, வசந்தா, சாந்தா, சசிரேகா, ஸ்ரீலதா போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவலிங்கம், விபுலானந்தன், குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், சித்திரா, றொபர்ட், சுதானந்தன், வரேந்திரன், மனோராகவன் போன்றோரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ்.காரைநகர் வலந்தலையிலும் வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 08.09.2019 இல் 90 வயதில் கனடாவில் உள்ள Brampton நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
”வயிற்று வலி பொறுத்து
உயிர் தந்த உறவே
பயிர் போல்
பார்த்துப்பார்த்து வளர்த்து
வாழ்வில் ஒளி ஏற்றி
விட்டுச் சென்றீரே அம்மா”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

