ஆறுதல்

நன்றி நவிலல்

சரஸ்வதி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரஸ்வதி சோமசுந்தரம்

வயது 9519 ஜூன், 1924 – 2 ஜூலை, 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மரணச்செய்தி அறிந்து உடன்வந்து உதவி புரிந்தவர்களுக்கும், ஆறுதல் கூறியவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஈமச்சடங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கும், ஈமச்சடங்குகளை நடத்தி வைத்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், இன்னும் பலவழிகளிலும் இன்று வரையும் துணை நின்றவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சிறம்பியடியில் 19/JUN/1924 ஆம் ஆண்டு நல்லதம்பி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக சரஸ்வதி அவர்கள் சிவதாசன், கைலாயபிள்ளை, குமாரசாமி, கமலாட்சி, பவானி போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் தம்பையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகன் சோமசுந்தரம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கமலபாஸ்கரன், நகுலபாஸ்கரன், சசிகலா, உமா, ஆனந்தபாஸ்கரன், விஜயபாஸ்கரன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஹேமலினா, சச்சிதானந்தம், ரவிந்திரன், அன்னலட்சுமி, சாந்தினி, பாமினி போன்றவர்களை பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். அத்துடன் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 02.07.2019 இல் 95 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

சிறம்பியடி தந்த சிந்தனை
உறவே
அறம் தவறாது அன்புடன்
பழகி
மறத் தமிழனாய் மானமுடன்
வாழ்ந்து
சிறகு ஒடிந்து
மண்ணில் வீழ்ந்தீரே

பிற அறிவித்தல்கள்

  1. 3 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 20 ஜூன், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.