1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி சுகுணபாலயோகன்
வயது 6712 ஜூன், 1952 – 18 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி சுகுணபாலயோகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே பூத்த எங்கள்
ஆருயிரே அம்மாவே!
ஆசையுடன் ஓடி வந்து
அன்புருக அணைத்தீரே!
இன்பமாக வாழ்ந்த உன்னை
காலன் கொண்டு சென்றனனே!
ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே....
வார்த்தைகள் இல்லாத உங்கள்
வடிவம் கண்டோம் அம்மா
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் கண்டோம் அம்மா
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுயநலம் இல்லாத இதயம் கண்டோம் அம்மா
ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம் பாடி
மகிழ்ந்தோம் அம்மா!
நிறைவாக நீ வாழ்ந்து நீள்துயில் கொண்டு
இன்றோடு ஓராண்டு.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

