4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாரதாம்பிகை பேரின்பநாதன்
வயது 545 மே, 1956 – 8 மே, 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்முடனே
இன்றுமுதல் இறைபதியில்
தஞ்சமென்று சென்று விட்ட எங்கள் அன்னையே!
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
அன்பு மொழி பேசி எம்மை அரவணைத்தீர்- இல்லத்தின் அரசியாய்!
காலம் தந்த நல்ல கண்ணிய வாழ்க்கையை
காலன் பறித்தெடுத்தான் கலங்கியது நெஞ்சமெல்லாம்
மலர்களின் உதிர்தல்கள் நிகழ்ந்த பின்பும்
அடிவேரின் புனிதங்கள் தீர்வதில்லை அம்மா!
நீங்கள் காட்டிய வழியில் பயணிப்போம்- பாருங்கள் எம்மை
சிந்தனைச் சிற்பியாய் சிறந்த நல் மனைவியாய்
வந்தனை செய்தே நல்வளமான வாழ்வு தந்தாயே சாரதாவே!!
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
உந்தனை நினைக்கையிலே உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம் என் செய்வோம்
எம்தனை தவிக்கவிட்டு எங்குதான் சென்றீரோ?
தேடுகிறோம் அம்மா தேம்பி அழுகிறோம்
கண்ணியமாய் வாழ்ந்த காருண்ணிய சீலியே
காசினியில் நின் புகழ் நிலைத்தே இருக்குமம்மா
பாசத்தால் அரவணைத்து அறிவு ஊட்டி
விழுதெறிந்து பெருவிருட்சமாய் வியாபித்து
நிற்கும் வேளையிலே விண்ணுலகை அடைந்தீர்கள்
அதை எண்ணி பேதையராய் துடிக்கின்றோம்
துடுப்பற்ற படகு ஆனோம் துயர்துடைக்க வந்திடுங்கள்
கல்லுருகும் உங்கள் கனிவான முகம் கண்டால்
நெஞ்சத்து சோர்வெல்லாம் தானே உருகிவிடும்
எங்கள் அம்மாவே ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டாலும்
ஆறவில்லை எங்கள் உள்ளம்
தவிக்கின்ற எம்மை விட்டு தனிப்பிறவி எடுத்து
எங்குதான் சென்றீர்கள்!!!
நீங்கள் இல்லா வாழ்வு நிலவு இல்லா வானம் அம்மா
உங்கள் நினைவுகளை சுமந்து
நிழலுக்கு மலர் தூவி வணங்குகிறோம்
கள்ளமில்லா உங்கள் உருவை எங்கு காண்போம்?
கனிவான வார்த்தைகளை எங்கு கேட்போம்?
உங்கள் உடல் எம்மை விட்டு போனதம்மா
உங்கள் உயிர் எம்மோடு வாழ்கிறது
நீங்கா நினைவுகளுடன் என்றும் எம் மனதில் வாழ்வீர்கள்!!!
உங்கள் நினைவோடு வாழ்ந்திடும் அருமைக் கணவன்,
பிள்ளைகள், சகோதரங்கள், பெறாமக்கள்.
உங்கள் ஆத்மா சாந்திக்காக கலட்டி வரசித்திவிநாயகரை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

