1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து குகராஜன்
வயது 5831 மார்ச், 1957 – 13 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- Frankfurt (Oder)
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து குகராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆற்றலின் பிறப்பிடமே!! அன்பின் உறைவிடமே!!
ஆண்டொன்று அகன்றிட்ட நாள் இன்று
அவனி போற்ற வாழ்ந்தீர்கள்- அப்பா
அனாதையாய் நாம் இன்று நீங்கள் இன்றி!
பாரினில் நாம் வாழ பலவழிகள் செய்தீர்கள்
பாதியில் சென்றதேன் எமைவிட்டு?
பக்குவமாய் எமைக்காத்த தெய்வமே!!
பரிதவிக்க விட்டீர்கள் எமை இங்கு!!
கண்ணிமையாய் எமைக்காத்த தந்தையே!!
கடைசிவரை காக்காது சடுதியில் சென்றதேன்!!
கலங்கி நிற்கின்றோம், கதறி அழுகின்றோம்
கனவாகி போகாதோவென்று கடவுளை வேண்டி!!
சின்ராசு என்றதும் சீரான உதவிகளை
சிறப்பாக சிலநொடியில் செய்தீர்கள்
ஊர் போற்றும் உத்தமனாய் வாழ்ந்தீர்கள்
ஊருக்காய் வாழாததேன் இன்னும் சிலகாலம்?
இன்நிகழ்வினில் இன்முகம் காட்டினீர்கள்
இடுக்கண் வரும் போது துணிவுடன் நின்றீர்கள்
உறவுகளை மதித்து உதவிகள் பல செய்தீர்கள்
உங்களுக்காய் வாழாததேன் இன்னும் சிலகாலம்?
நல்லவர் மேல் தீராத ஆசை ஆண்டவனுக்கு
நடுவயதில் சேர்த்துக் கொண்டான் தன்னோடு
மரணங்கள் மண்ணில் வாழும் மனிதருக்கு
மனதில் வாழும் தெய்வங்களுக்கு ஏது!!!
என்றும் உங்களின் நினைவுடன் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

