மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து சாந்தலிங்கம்
ஓய்வுபெற்ற காசாளர்- இலங்கை வங்கி
வயது 851 நவம்பர், 1933 – 16 மே, 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சாந்தலிங்கம் அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயமங்களம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பாஸ்கரன், மனோகரன், ஜெயகரன், வித்யப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரதினி, ராஜினி, தியாகினி, சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சந்திரசேகரம், இலங்கைநாயகம் மற்றும் சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மயிலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும் சிவகாமிப்பிள்ளை, பரமேஸ்வரி, கிருஷ்ணவேணி, பரமேஸ்வரி, ஶ்ரீநிவாசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நடராசா, தனபாலசிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அபிராமி, துவாரகா, அர்ச்சனா, அதீஸ்வர், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயம் அமைந்துள்ளதும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நயினாதீவில் சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சாந்தலிங்கம் அவர்கள் 01/Nov/1933 இல் அழகு நிறைந்த இவ் தீவில் சோமசுந்தரம், சந்திரசேகரம், இலங்கைநாயகம், சாரதாம்பாள் போன்ற உடன்பிறப்புகளுடன் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சின்னத்தம்பி சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகள் விஜயமங்களம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பாஸ்கரன், மனோகரன், ஜெயகரன், வித்யப்பிரியா ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன்,ரதினி, ராஜினி, தியாகினி, சிறிகாந்தன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் அபிராமி, துவாரகா, அர்ச்சனா, அதீஸ்வர், அஞ்சனா போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் இலங்கை வங்கி காசாளராகச் செயற்பட்டு ஓய்வு நிலை அடைந்தார், எப்போதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.05.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
நயினை தீவின்
......நற் புதல்வனே
நன்மைகள் செய்து
.......நன்றாக வாழ்ந்து
புன்னகை முகத்துடன்
.....புதுவாழ்வு வாழ்ந்து
போனீரே எமை பிரிந்து
.......தூர தேசம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

