மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து தியாகராஜா
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 911 டிசம்பர், 1927 – 21 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தியாகராஜா அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலோகநாயகி(சிவம்), சிவலோகநாதன்(நாதன்), சிவகலா(கலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அசோகன், சுஜா, ராஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிரூசிதன், லக்சிதன், சிம்ரன், சாரு, சியோனா, சினேகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரி மட்டுவில் 01/DEC/1927 இல் திரு.திருமதி சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.தியாகராஜா அவர்கள் பொன்னம்மா, பொன்னுத்துரை போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகள் நல்லம்மா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவலோகநாயகி, சிவலோகநாதன், சிவகலா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து அசோகன், சுஜா, ராஜன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து மிரூசிதன், லக்சிதன், சிம்ரன், சாரு, சியோனா, சினேகன் போன்ற அழகுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கையில் ஆசிரியராக கடமையாற்றி பல மாணவர்களுக்கு கல்வியில் ஒளி ஏற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.06.2019 இல் 91 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
மட்டுவில் மண்ணின் மங்காத வீரனே
எண்ணும் எழுத்தும் போதித்த வள்ளலே
கண்ணென கல்வியை காத்தருளிய உள்ளமே
மண் உலகை பிரிந்து மனதினில் நிலைத்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

