1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜாதேவி சிவானந்தராஜா
வயது 588 ஜூன், 1961 – 21 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளான் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரோஜாதேவி சிவானந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாரிடம் சொல்லி அழுவேன்
யாரிடம் அவள்கதை கூறுவேன்
யாரிடம் அவள்முகம் காணுவேன்- இனி
யாரிடம் அவள் தரும் அன்பைத் தேடுவேன்
முடியுமா?...
என் தேவியின்
அன்புக்கும் கனிவுக்கும் முன்னால்
எவராலும் ஈடுசெய்ய முடியுமா?...
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
தவிக்கின்றேன்.. தள்ளாடுகின்றேன்..
தயங்குகின்றேன்.. என் தவமணியே...
ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே....
உன்னை விளக்காக்கி
தரணியில் தகுதி கொடுத்தாயே என் தாயே
தங்கங்கள் பல இருந்தும் தாங்க முடியவில்லை
தவிக்கின்றோம் தாயின் அன்புக்காய்...
ஆயிரம் உறவுகளிருந்தென்ன ஆகிடுமா...
உம் அன்புக்கு ஆகவில்லை அலைகின்றோம்- எம்
அன்னையின் அன்புக்காய்...
எம் தாயே
நீங்கள் எம்மைவிட்டுச் சென்று
நாட்கள் மாதமாகி இன்று
வருடம் ஒன்றாகிவிட்டது- ஆனால்
இன்றும் எம் கண்முன்னே
மலையென உம் பூமுகம்- எம் நெஞ்சில்
கண்முன்னே நீ வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம் முன்னே உம் முகம் என்னாளும் உயிர் வாழும்
எம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்ட எம் பாசமிகு குல விளக்கின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— கணவர், பிள்ளைகள்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தின் கல்வியங்காட்டில் 08/JUN/1961 இல் திரு.திருமதி வேலாயுதம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகள் சரோஜாதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் லோகநாதன், ஜெயரஞ்சன் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் பொலீஸ் உத்தியோகத்தர் சோமசுந்தரம் அழகம்மா தம்பதிகளின் மகனான திரு.சிவானந்தராஜா(Former Electrical Forman- K.K.S Cement Factory, Currently Employed at Eaton Electrical) எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்
முழுக் கதையையும் வாசிக்க
இவர்களின் அன்பான வாழ்க்கையின் பயனாக தர்ஷிகா, பிரியந், அபிஷிகா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர் பிள்ளைகள் பெரியவர்களாக ஆனதும் நவநீதன் என்பவரை திருமணம் முடித்து வைத்ததுடன் தனது வம்ச வளர்ச்சிகளான சிரினா, சிரேஜா, ஆரியன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரும் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.11.2019 இல் 58 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.
கை பிடித்த நாள் முதல்
கலங்காமல் வாழ்ந்தவளே
வல்ல குணம் கொண்டு வாயாரப் புகழ்ந்தவளே
நெற்றியிலே குங்குமம் நித்தம் சூடுபவளே
வற்றிய போதும் வாயார உணவழித்த
பற்றே எங்கள் பாச உறவே பிரிந்தீரே எமை விட்டு
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

