ஆறுதல்

9ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு14 செப்டம்பர், 1941
இறப்பு28 அக்டோபர், 2011
சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் படம்

சரோஜினிதேவி சிவஸ்கந்தா

வயது 70, ஓய்வுபெற்ற தொலைபேசி இயக்குனர்- இலங்கை தொடர்பு திணைக்களம்

பிறந்த இடம்
காரைநகர் கருங்காலி
வாழ்ந்த இடம்
காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திதி : துதியை

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறுதலாய் இருந்த அப்பாவும் வந்துவிட்டார் உங்களிடம்
ஆற்றுகைப் படுத்த யாருமில்லா உலகில் வாழுகிறோம்
பெற்றவர்கள் நீங்களில்லாமல் பெருந்துயரில் நாம்
உற்றவர், சுற்றவர் இருந்தென்ன உம் போலாகுமா?
முற்றும் இழந்துவிட்டோம் உம்மை

நற்றோராய் வளர்த்தீர் நடுவிலே சென்றுவிட்டீர்
நாற்திசையும் தேடுகிறோம் நாலு வார்த்தை பேசிட
காற்சட்டை போட்டு கட்டழகாய் வளர்த்த நாட்கள்
கோட், சூட் போட்டாலும் வந்திடுமா அம்மா

பாற்சோறு ஊட்டி பக்குவமாய் வளர்த்தீர்
பாலூற்றி உம்மை பற்றியெரிய விட்ட பாவிகள் நாம்
மற்றோரை எல்லாம் வேற்றாரைப் பார்க்காமல்
ஒற்றுமையாய் ஒன்றிணைத்தீர் ஆனாலும்
சீற்றம் நீர் கொண்டால் சிங்கம் கூட ஓடிவிடும்

போற்றி போற்றி என்று சொன்ன பொல்லாத கடவுளும்
ஈற்றிலே விட்டுவிட்டான் பற்று வைத்த அம்மாவை.....

கொட்டும் மழை பாராமல் எமக்காய் உழைத்த அம்மாவை
பெட்டியிலே போட்டு போகவிட்டோம்
சற்றும் எதிர்பாரா நேரத்தில் இருவரும் போய்விட்டீர்
நற்றவம் செய்துவிட்டோம் நானிலத்தில் உமைப்பெற
ஏற்றம் நாம் காண ஏணியாய் நீர் இருந்தீர்
ஏற்றியே தீபம் உமை வணங்க வைத்திட்டீர்
தேற்றிவிட எமக்கு இப்போ யாரிருக்கா அம்மா
சொற்கள் வரவில்லை உமைச் சொல்லிட சோர்ந்தே போகிறோம்
காற்றிலே நாம் அழைக்கும் குரல் உம்காது வந்து சேராதோ
கற்றறிந்த அம்மா கண்கலங்கி வாடுகின்றோம்
கண்ணீர் வந்து துடைத்துவிடும்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 8 நவம்பர், 20187ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 30 அக்டோபர், 20198ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.