மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சறோஜினிதேவி யோகலிங்கம்
வயது 6723 ஏப்ரல், 1952 – 24 மே, 2019
- பிறந்த இடம்
- அனலைதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி யோகலிங்கம் அவர்கள் 24-05-2019 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, ஞானாமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி அன்னம்மா(சிவகாமி அம்மன் கோவிலடி இணுவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஷ், சறண்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
விக்னேஸ்வரி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் தயாநிதி, காலஞ்சென்ற அரிகரன் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கனகலிங்கம், சிவலிங்கம், அஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரி, ஞானலிங்கம், சோதியலிங்கம், நவரெத்தினலிங்கம், நாகேஸ்வரலிங்கம், இராசேந்திரம், நந்தகுமார், மனோகரி, நிவா, உஷா, நஷீர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாதசுந்தரம் ஜெயதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த அனலைதீவு 5ஆம் வட்டாரம் சரவணமுத்து ஞானாமிர்தம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக சறோஜினிதேவி அவர்கள் 23/APR/1952ஆம் ஆண்டில் இவ் அவனியில் விக்னேஸ்வரி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், சந்திரகுமார், தயாநிதி, அரிகரன், சரஸ்வதி எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் இராமசாமி அன்னம்மா தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான யோகலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து டினேஷ், சறண்யா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் தனது அன்பு மகளுக்கு மயூரன் என்பவரை திருமணம் முடித்து வைத்து மாமியாக குறையின்றி கடமைகள் ஆற்றி மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு. சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 24.05.2019 இல் 67 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அனலை தீவின்
......அழகு தேவதையே
அன்பாகப் பேசும்
......ஆருயிர் உள்ளமே
ஆனந்த மழையில்
......நனைந்த உள்ளமே
ஆதரவற்றுத் தவிக்கவிட்ட
......ஆருயிர் உறவே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

