நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜினிதேவி தேவசிகாமணி
வயது 769 ஏப்ரல், 1943 – 1 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வானிபம் செய்த இடமும், கடலுணவு, மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறையில் 09/APR/1943 இல் திரு.திருமதி S.V.நடராஜா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் சரோஜினிதேவி அவர்கள் ரூபவதி, சாரதாதேவி, நிர்மலாதேவி, விஜயகுமார், சுரேஷ்குமார், வத்சலாதேவி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தியாகராஜா, காந்திமதி தம்பதிகளின் அன்பு மகன் தேவசிகாமணி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக ராம்குமார், அசோக்குமார், சுரேந்திரகுமார், அரவிந்தகுமார், சுகுணா, ரேணுகா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து விஜயபவானி, இந்துமதி, விஜயதர்ஷினி, திவாகரன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து தேவசிகாமணி, தேஷ்வினி, தீபகுமார், சுகுணா, திவியபாரதி, அபிஷேக்குமார், அஜய்ஹரன், ரிதிஷ்குமார், தர்ஷிகா, ஹனிஷ்கா, ஸ்ரீமகாலஷ்மி போன்ற பேரப்பிள்ளைகளுடனும் ஆராதனா எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.09.2019 இல் 76 வயதில் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
வல்வை தந்த முத்தே
எல்லை இல்லா அன்பே
வில் போன்ற புருவமுடைய
சில் என குளிர்மை தரும்
பல் அன்பு கொண்டு
நின்றாய் மலையாய்
கல் லாய் போய்
கண்ணீர் வரவைத்தாயே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

