நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சர்வலோகலட்சுமி கனகசுந்தரம்
வயது 786 ஜனவரி, 1941 – 30 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- செட்டிக்குளம், Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்கும் இயற்கை அழகு நிறைந்த புங்குடுதீவில் 06/JAN/1941 ஆம் ஆண்டில் அழகுக் குழந்தையாக சர்வலோகலட்சுமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பூலோகசிங்கம், சந்தானலட்சுமி, வீரசிங்கம், இலங்கசிங்கம், விஜயலட்சுமி, வீரலட்சுமி போன்ற உடன்பிறப்புகளுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகியதும், திரு. கனகசுந்தரம் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் வாழ்க்கைப் பயனத்தில் வம்ச விருத்தியாக தமிழ்செல்வி,தமிழ்செல்வன், தயாளன், தர்மசீலன், தவசீலன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து விக்னேஸ்வரன், சீதா, பத்மா, செயகலாராணி, கமலேஸ்வரி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து லதுஷா, நிவேதா, றிசி, சிபி, தருண்றாஜ், துளசி, சாள்ஸ் ஹரி, சில்வி, சில்வா,ஸ்ரெப்பன், இலக்கியா, கௌசல்யா, அகல்யா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் வவுனியா செட்டிக்குளத்தில் வசித்து வந்ததுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 30.09.2019 இல் 78 வயதில் இந்தியாவில் உள்ள Chennai நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

