மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சர்வானந்தம் அருந்ததி
வயது 7323 அக்டோபர், 1945 – 28 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கதிரேசன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சர்வானந்தம் அருந்ததி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சர்வானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரமேஷ்(சுவிஸ்), பிரியதர்ஷினி(பிரியா- சுவிஸ்), மிருணாளினி(மிருணா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜனா(சுவிஸ்), பிரபாகரன்(பிரபா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோகராசா(லண்டன்), தவராசா(ஜனாதிபதி சட்டத்தரணி- கொழும்பு), கேதாரகௌரி(கொழும்பு), யோகராசா(சுவிஸ்), உமாதேவி(பவானி- சுவிஸ்), கனகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி(லண்டன்), கௌரிசங்கரி(சிரேஷ்ட சட்டத்தரணி- கொழும்பு), காலஞ்சென்ற ஞானவேல்(அப்பன் - கொழும்பு), மல்லிகாதேவி(சுவிஸ்), தவச்செல்வம்(சுவிஸ்), சுசிகலாதேவி(சுசி- சுவிஸ்), வீரசிங்கம்(மகேஸ்வரன் -ஓய்வு பெற்ற அதிபர்), அகிலேஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியை),பிரேமாவதி(ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வரலட்சுமி(ஓய்வு பெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற பரமலிங்கம், காலஞ்சென்ற விஸ்ணுகுமார் ஆகியோரின் அன்புச் சகலியும்,
ப்ரீத்தி, ஹரிணி, ஹரிஷ்வினி, வர்ஷினி, அக்ஷயன், தனுக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னரின் பூதவுடல் 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களைக் கொண்ட அழகு நிறைந்த புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தில் 23/OCT/1945 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான அருந்ததி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் லோகராசா, தவராசா, கேதாரகௌரி, யோகராசா, உமாதேவி, கனகராசா போன்ற உடன்பிறப்புகளுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சுப்பிரமணியம் தனலக்ஷ்மி தம்பதிகளின் அழகிய ஆண் அழகனான சர்வானந்தம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் இனிமையான வாழ்வின் சொத்தாக ரமேஷ், பிரியதர்ஷினி, மிருணாளினி எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜனா,பிரபாகரன் என்பவர்களை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த ப்ரீத்தி, ஹரிணி, ஹரிஷ்வினி, வர்ஷினி, அக்ஷயன், தனுக்ஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.09.2019 இல் 73 வயதில் கொழும்பு நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
“அம்மா என அழைக்க
அருகில் இல்லையே
தம்மால் நாம் பெற்ற அன்பை
தரணியில் யார் தருவார்
எம்மால் உனை நினைத்து
ஏங்கி அழுகிறோம்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

