மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் மாணிக்கவாசகர்
ஓய்வுபெற்ற உப அதிபர்- வேலணை கிழக்கு மகாவித்தியாலயம், அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 8915 டிசம்பர், 1929 – 10 மே, 2019
- பிறந்த இடம்
- வேலணை 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வேலணை 2ம் வட்டாரம், வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு- 06 வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் 10-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்துத் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(ஓய்வுபெற்ற அதிபர்- வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்தியகலாநிதி இளந்திரையன்(நோர்வே), இளஞ்செழியன்(மேல் நீதிமன்ற நீதிபதி- திருகோணமலை), சிவகெளரி(கனடா), இளம்பிறையன்(விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), இளங்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயபிள்ளை மற்றும் கமலாதேவி, மூத்ததம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருமதி இளந்திரையன், லலிதா ராணி, ஸ்ரீ கிருஷ்ணராஜா, சிவசக்தி, ஜெயஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான பகவதி, திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை மற்றும் சிதம்பரநாதன், சித்திரவேல், கைலாயநாதன், காலஞ்சென்ற முருகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நதியா, சந்தியா, சிந்தியா, ஜொனத்தன், அபிமன்யு, கடோற் கஜன், ரிஷி, வைஷாலி, பிரியங்கா, ராகுல், லக்ஷான், ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 08 :00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2019 திங்கட்கிழமை அன்று கேணியடி கொக்குவில் மேற்கு கொக்குவில் எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரத்தில் 15/DEC/1929 இல் சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக மாணிக்கவாசகர் அவர்கள் சண்முகம், கைலாயபிள்ளை, கமலாதேவி, மூத்ததம்பி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் சிவபாக்கியம்(ஆசிரியர்&அதிபர்) அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வைத்தியக் கலாநிதி இளந்திரையன், இளஞ்செழியன்(மேல் நீதிமன்ற நீதிபதி -திருகோணமலை), சிவகௌரி, இளம்பிறையன்(விரிவுரையாளர்-யாழ் பல்கலைக்கழகம்), இளங்குமரன் ஆகிய அகிலத்தில் தமிழினம் போற்றி நிற்கும் அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த அதிசய மனிதரானார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் நன்கு படித்து ஆசிரியராக கடமை புரிந்ததுடன், உப அதிபராக வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தில் சேவை செய்ததுடன் ஓய்வு நிலை பெற்றார். அகில இலங்கை சமாதான நீதவானாகவும் மக்களுக்கு சேவையாற்றியதுடன்,பல்வேறுபட்ட நூல்களுக்கு அணிந்துரை எழுதியதுடன்,அரசியல் விடையங்களில் அக்கறை கொண்டவரும், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.05.2019 இல் 89 வயதில் கொழும்பு 06 உள்ள வெள்ளவத்தையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்புப் பேச்சே
......அழகிய புன்சிரிப்பே
அடக்கம் உடைய
.......அறிவுக் கடலே
அகிலம் போற்ற
.....வாழ்ந்த செம்மலே
அடங்கியது மூச்சு
....... அகிலம் துறந்தாய்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

