ஆறுதல்

மரண அறிவித்தல்

சதாசிவம் பொன்னம்பலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சதாசிவம் பொன்னம்பலம்

சிவாஸ் கபே- யாழ் ஆஸ்பத்திரி வீதி, லிங்கம் ஸ்ரோர்- இலுப்பையடிச் சந்தி, யாழ்ப்பாணம்- முன்னாள் உரிமையாளர்.

வயது 8418 ஜனவரி, 1935 – 23 ஜூலை, 2019

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
இராசாவின் தோட்டம், Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்பலம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சிவரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணன்(Mr. Digital Photo Lab), நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்லத்துரை மற்றும் ஞானாம்பாள்(இலங்கை), ராசம்மா(இலங்கை), கனகம்மா(இலங்கை), பரமலிங்கம்(துபாய்), பாலசிங்கம்(முன்னாள் மாகாண பிரதம ஆணையாளர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மதியாபரணம், தேவராசா மற்றும் அருமைநாயகம்(இலங்கை), சிவசக்தி(துபாய்), அன்னலட்சுமி(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), பத்மநிதி(கனடா) சபாநாதன்(லண்டன்), சிறிநாதன்(சுவிஸ்), தயாநிதி(டென்மார்க்), ராசநாதன்(கனடா), சிவாநிதி(கனடா), செல்வநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அர்ச்சனா- உதயபாலன், கீர்த்தனா, ரிஷிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த அனலைதீவில் 18/Jan/1935 இல் திரு.திருமதி பொன்னம்பலம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சதாசிவம் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் திருநாவுக்கரசு, செல்லத்துரை, ஞானாம்பாள், ராசம்மா, கனகம்மா, பரமலிங்கம், பாலசிங்கம் எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கனகசபை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகள் கனகாம்பிகை எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து மனோகரி, யோகேஸ்வரி, சிவரூபன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்ந்து அருணன், நித்தியலட்சுமி என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து அர்ச்சனா-உதயபாலன், கீர்த்தனா, ரிஷிபன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் சிவாஸ் கபே- யாழ் ஆஸ்பத்திரி வீதி,லிங்கம் ஸ்ரோர்-யாழ்.இலுப்பையடிச்சந்தி போன்றவற்றின் முன்னாள் உரிமையாளரான இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்ய இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.07.2019 இல் 84 வயதில் கனடாவில் உள்ள Brompton நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அனலைதீவின் அற்புத மனமே
தனக்கென வாழாது பிறருக்காய் வாழ்ந்து
அன்பொளி பெருக்கி அனந்தமாகி
கண்ணென காத்தருளி
விண்ணில் சேர்ந்து விண்மீன் ஆனீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.