1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சத்தியதேவி சிவபாலன்
வயது 663 ஜூன், 1953 – 7 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியதேவி சிவபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் அழகு இடமும் நெல்வயல், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த உடுப்பிட்டியில் 03/JUN/1953 இல் திரு திருமதி.விஸ்வலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் புத்திரியாக சத்தியதேவி அவர்கள் சிவச்செல்வராசா, தர்மகுலராசா, சகுந்தலாதேவி, சற்குணதேவி, விமலராசா, ரவீந்திரராசா போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் வைரமுத்து யோகம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான சிவபாலன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக ஜெகன், ஜெயந்தன், ஜெசிந்தா, ஜானுஜா, ஜாமினி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து சுசிதா, பிறேம்குமார், கவியரசன் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து நதுஜன், தர்ம்ஜா, ஆயுசன், நிதுசன், கவீன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கிய இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார் இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.07.2019 இல் 66 வயதில் சந்தைவீதி உடுப்பிட்டியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அன்னை வதனமே - எங்கள்
அழகு உருவமே
புன்னகை உதடே - அனைவர்
புது வசந்தமே
பன்முகம் கொண்டு
பாசமாய் வளர்த்து
நின் எமைப் பிரிந்தீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

