ஆறுதல்

மரண அறிவித்தல்

சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி

வயது 488 ஜனவரி, 1971 – 25 மே, 2019

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லதுரை கண்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னதம்பி ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சத்தியமூர்த்தி(சத்தியா) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்து(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), தெய்வீகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரான்ஸை சேர்ந்த நாகராஜா, தெட்சணாமூர்த்தி, இராஜேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஞானமூர்த்தி, கணேசமூர்த்தி, தேவகுமாரி, கருணமூர்த்தி, காலஞ்சென்ற புவனேசமூர்த்தி, ஜெயபாலமூர்த்தி, சிவமூர்த்தி, யோகேஸ்வரி, ஞானகெளரி, பிரான்ஸை சேர்ந்த ஜெகதீஸ்வரி(கலா), ஜெயந்திராணி(ஜெயந்தி), அருள்வதனி(ரவிதா), சுதர்சினி(சுதா), நளினி(வளர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சினி, விஜிதா, மதுரா, தவிந்தன், தர்சிகா, தர்சன், அருட்சன், ரஜிந்தன், அந்துசன், ரதுசன், சதுர்திகன், கார்த்திகன், ரிசாந் ஆகியோரின் அன்பு மாமியும்,

தயாபரன்(தயா) அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும், பிரசித்தி பெற்ற கந்தன் ஆலயம் உள்ளதும், படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த இணுவிலில் 08/JAN/1971 ஆம் ஆண்டில் செல்லதுரை கண்மணி தம்பதிகளுக்கு அன்பு மகளாக விக்கினேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் நாகராஜா, தெட்சணாமூர்த்தி, இராஜேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் சின்னதம்பி ஞானபூரணம் தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான சத்தியமூர்த்தி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து சிந்து, கீதன், தெய்வீகன் போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் ரஞ்சினி என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.05.2019 இல் 48 வயதில் பிரான்ஸில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"இணுவில் மண்ணின்
......இனிய உறவே
இன்பம் தந்திடும்
......பண்பு உள்ளமே
இரக்க குணமே
...... இளகிய மனமே
இங்கே நாம் தவிக்க
......எங்கே போனீர்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.