மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாதுலிங்கம் செல்வநாதன்
வயது 7216 செப்டம்பர், 1946 – 5 மே, 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- அல்வாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட சாதுலிங்கம் செல்வநாதன் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாதுலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வதாஸன்(லண்டன்), ஜெயதாஸ்(லண்டன்), ஜெயசுதா(லண்டன்), கண்ணதாஸன்(லண்டன்) ஆகியேரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சந்திரா(கனடா), காலஞ்சென்ற வைத்தியநாதன், புஷ்பநாதன்(இலங்கை), ரகுநாதன்(இலங்கை), காலஞ்சென்ற லோகநாதன், இந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசி(லண்டன்), தர்சியா(லண்டன்), பிரபாலினி(லண்டன்), நிவேதிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, லவன், இனோஜன், பபிஷன், திவ்யா, டனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-05-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
செல்வநாதன் வரலாறு:-
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் நெல்வயல்களும், மிளகாய்ச்செடிகளும், வெங்காய வயல்களும், மரக்கறித் தோட்டங்களும், வாழைத்தோட்டம், பழவகைகள், பயன்தரும் மரங்கள் என செழிப்பு மிகுந்த உடுப்பிட்டியில் 16-09-1946 இல் சாதுலிங்கம் பாக்கியம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் செல்வநாதன் அவர்கள் பத்மநாதன், சந்திரா, வைத்தியநாதன், புஷ்பநாதன், ரகுநாதன், லோகநாதன், இந்திரா ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் அன்பும், அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் இலட்சுமிப்பிள்ளை அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும், சந்தோசமாகவும் வாழ்ந்து செல்வதாஸன், ஜெயதாஸ், ஜெயசுதா, கண்ணதாஸன் எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் சசி, தர்சியா, பிரபாலினி, நிவேதிகா ஆகியவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புடன் செய்ததுடன், இலக்கியா, லவன், இனோஜன், பபிஷன், திவ்யா, டனுஷ்கா ஆகிய பேரப்பிள்ளைகளை அணைத்து மகிழ்ந்தார்.
மேலும் அண்ணண்ணா என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் இவர், வாழ்வில் நற்பண்பும், ஒழுக்கமும் நிறைந்தவராகவும், பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-05-2019 இல் 72 வயதில் அல்வாயில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கருணைக் கண்ணா
கலங்கா உருவமே
பாரதி மீசையே
பண்பு உள்ளமே
வாழ்வில் இனிமையாக
வாழ்ந்த உறவே
நித்தம் நினைப்புடன்
நிழலாடும் உருவமாய்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

