மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சவரிமுத்து மரியநாயகம்
வயது 6914 ஜூலை, 1946 – 13 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து மரியநாயகம் அவர்கள் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனவல் சவரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசீலி(பூவதி- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆலின் நிருபா(நோர்வே), பிரசன்னா பெர்னாண்டோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அல்பிரட், வேவி, பெனடிக்ற், அமுது, செல்வரட்ணம், மற்றும் ராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(நோர்வே), ஜீன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, மகேஸ்வரி, மற்றும் புனிதசீலி(பிரான்ஸ்), புஸ்பம்(இலங்கை), காலஞ்சென்ற ராணி, டொமினிக் ஜீவா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, ருவீந்(நோர்வே), அல்வின், சீமோன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-12-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அடைக்கல மாதா கோவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

