மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபமாலை விக்டர் இம்மனுவேல்
வயது 672 பிப்ரவரி, 1952 – 4 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வலித்தூண்டல்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை விக்டர் இம்மனுவேல் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் செபமாலை அமலோற்பவம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் சுவாம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆன் சர்மிலி, அசோக்குமார், அசோக் கமல்ராஜ், சாலற் நிதிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகுமார், குயிலா, சிந்து, நியூட்டன், ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பிலோமினா(பூமணி), அன்ரனி அரியதாஸ், வின்சன் ஞானமணி(ஒல்லாந்து), ஜெறாட் குளோறி(மல்லிகா – கனடா), காலஞ்சென்ற மரிய ஸ்ரெல்லா(தங்கம் – பிரான்ஸ்), ஜோண் பப்ரிஸ்ற்(ராசா – டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராணி, அரசராணி(இலங்கை), அரியராசா(இலங்கை), யோகராசா(இலங்கை), காலஞ்சென்ற பவளராணி, ஜெயராணி(இலங்கை), ஆரோக்கியநாதர்(யேசுக்குட்டி – பிரான்ஸ்), எமிலி(இலங்கை), பற்குணம்(இலங்கை), அழகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
குருதாஸ், ஆகாஸ், அனிஷா, நியூசன், தியா, நிவிஷா, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய இடமும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த வலித்தூண்டலில் 02/FEB/1952 ஆம் ஆண்டில் தோமஸ் செபமாலை அமலோற்பவம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக விக்டர் இம்மனுவேல் அவர்கள் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பிலோமினா, அன்ரனி அரியதாஸ், வின்சன் ஞானமணி, ஜெறாட்குளோறி, மரியஸ்ரெல்லா, ஜோண்பப்ரிஸ்ற் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் ஆசீர்வாதம் சுவாம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகள் சகாயராணி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து ஆன் சர்மிலி, அசோக்குமார், அசோக்கமல்ராஜ், சாலற்நிதிலா போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சந்திரகுமார், குயிலா, சிந்து, நியூட்டன், போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து குருதாஸ், ஆகாஸ், அனிஷா, நியூசன், தியா, நிவிஷா, றியா போன்ற பேரப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் செல்லமணி சம்மாட்டி என அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.06.2019 இல் 67 வயதில் கனடாவில் உள்ள Brampton நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
”எங்கள் சம்மாட்டி
........ தங்கத் தலைவன்
உங்கள் மனமே
.......உருகும் மெழுகு
பங்கம் அற்ற
........பாச மலையே
அங்கம் மறைந்து
......அகிலம் துறந்தீரே”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

