நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீனிவாசகம் நவரத்தினம்
வயது 8510 ஆகஸ்ட், 1936 – 10 ஜூன், 2022
- பிறந்த இடம்
- உரும்பிராய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் வடக்கு இந்து பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் நவரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
ஓர் திங்கள் ஆனதுவோ...
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க
என் உதடுகள் இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய
அந்த நாட்கள் எம்மை விட்டு
நீண்ட தூரம்சென்றாலும்
மறையாது அப்பா!
31 நாள் அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால்வாடும்
குடும்பத்தினர்..!!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

