மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீனிவாசகம் சரவணபவன்
Retired Station Master - Jaffna
வயது 9013 டிசம்பர், 1928 – 13 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சரவணபவன் அவர்கள் 13-07-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சீனிவாசகம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற மருதலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயந்தன், வாசுகி(கனடா), மாதினி(லண்டன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
செளந்தரநாயகம், பாக்கியதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், சிவகாமசுந்தரி, பரமாணந்தன், இரத்தினசிகாமணி, காந்திமதி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியங்கா, காயத்திரி, வைஸ்னவி, வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 13/DEC/1928 இல் உரும்பிராய் வடக்கு திரு திருமதி சீனிவாசகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு. சரவணபவன் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பரமேஸ்வரன், சிவகாமசுந்தரரி, பரமாணந்தன், இரத்தினசிகாமணி மற்றும் காந்திமதி,புவனேஸ்வரன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், நவாலி மருதலிங்கம் கனகம்மா தம்பதிகளின் மகள் கமலாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜெயந்தன், வாசுகி, மாதினி போன்ற அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சௌந்தரநாயகம், பாக்கியதாசன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பிரியங்கா, காயத்திரி, வைஸ்னவி, வர்சினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் உரும்பிராய்,நவாலி,திருநெல்வேலி போன்ற இடங்களில் வாழ்ந்த இவர் Jaffna station master ஆக இருந்து ஓய்வு பெற்றதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.07.2019 இல் 90 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
மலேசியா மண்ணின்
மைந்தனே
மாண்புடன் வாழ்ந்த
உறவே
மங்கா ஒளியாய்
மிளிந்து
மகத்துவம் காத்து
வாழ்ந்து
மறைந்து போனீரே
தவிக்கவைத்து
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

