ஆறுதல்

மரண அறிவித்தல்

சீரங்கம் செல்வராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சீரங்கம் செல்வராஜா

வயது 793 ஜூலை, 1939 – 17 ஜூன், 2019

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
Newbury Park

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சீரங்கம் செல்வராஜா அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிச்சந்திரன்(கனடா), ஜெயச்சந்திரன்(லண்டன்), செல்வச்சந்திரன்(லண்டன்), செல்வரஞ்சினி(லண்டன்), மஞ்சுளா(கனடா), உமாரதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலாதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கந்தப்பு, சோதிலிங்கம், சின்னக்கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீபன்(லண்டன்) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

பிரபாகரன்(லண்டன்), ஈஸ்வரமூர்த்தி(கனடா), சிவகணேசன்(லண்டன்), பத்மா(கனடா), தமயந்தி(லண்டன்), ஜெயவதனி(லண்டன்), தர்ஷிகா(லண்டன்), புனிதா(ஜேர்மனி), பிரபா(ஜேர்மனி), கிருபா, கமலன், விமலன், கங்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திராணி, மல்லிகா, ஜெயராஜா, அரியராஜா, நளினி, கமலாதேவி, கீதா மற்றும் காலஞ்சென்றவர்களான குணசிங்கம், புஷ்பராணி, பரதேவ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீணா, நவீன், நவிதா, நிலானி, சந்துரு, கௌசிகா, மதுஷன், மொட்ஷிகா, பிரியா, ஜனஜா, பிரவீன், சாய்ராம், அபிதா, சௌமியா, கோகுல், தியானி, திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், எதற்கும் பயப்படாத மக்களும், மரக்கறித் தோட்டம், பயன்தரு மரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டியில் 03/JUL/1939 ஆம் ஆண்டில் திரு.திருமதி சின்னத்தம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக சீரங்கம் அவர்கள் விமலாதேவி, குணரத்தினம், கந்தப்பு, சோதிலிங்கம், சின்னக்கிளி போன்றவர்களின் உடன் பிறப்பாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி வைரமுத்து அன்னம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திரு.செல்வராஜா அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், செல்வச்சந்திரன், செல்வரஞ்சினி, மஞ்சுளா, உமாரதி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பிரபாகரன், ஈஸ்வரமூர்த்தி, சிவகணேசன், பத்மா, தமயந்தி, ஜெயவதனி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பிரவீணா, நவீன், நவிதா, நிலானி, சந்துரு, கௌசிகா, மதுஷன், மொட்ஷிகா, பிரியா, ஜனஜா, பிரவீன், சாய்ராம், அபிதா, சௌமியா, கோகுல், தியானி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் கமலம் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.06.2019 இல் 79 வயதில் பிரித்தானியாவில் உள்ள Newbury park நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

பாச உறவே பண்பில்
உயர்ந்து
நேச மனமாய் நெஞ்சில்
புகுந்து
காசினி முழுதும் கருணை
காட்டி
ஆசி தந்து ஆயுள்
துறந்தாயே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.