மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சிவலிங்கம்
உரிமையாளர்- செல்லையா சிவலிங்கம் நகை மாளிகை
வயது 6710 அக்டோபர், 1951 – 21 ஜூன், 2019
- பிறந்த இடம்
- மண்கும்பான்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவலிங்கம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரிமளா(பிரான்ஸ்), சியாமளா(நோர்வே), கோமளேஸ்(சுவிஸ்), நிரஞ்சலா(லண்டன்), சிவரஞ்சினி, அஜந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்(செல்லையா&சன்), இந்திரசித்து(முன்னாள் உரிமையாளர்- லலிதா ஜுவல்லரி, யாழ்ப்பாணம், ராணி ஜுவல்லரி, கொழும்பு), மற்றும் தங்கமலர், சிவபாதலிங்கம்(முன்னாள் உரிமையாளர்- செல்லையா சிவபாதலிங்கம் நகை மாளிகை), மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநேசன்(பிரான்ஸ்), சுரேஷ்குமார்(நோர்வே), பாலசிங்கம்(சுவிஸ்), சிவதாஸ்(லண்டன்), ஆனந்தன்(யாழ் மைதிலி நகைமாடம், யாழ் மைதிலி ஜுவல்லரி, கொழும்பு), ஜெகானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா மஹாலட்சுமி, நடராசா(மைதிலி நகைமாட ஸ்தாபகர்), மற்றும் மகுடராணி, காலஞ்சென்ற பூலோகநாதன், சுந்தரலிங்கம், இராஜலிங்கம்(முருகன் ஸ்டோர்ஸ்- நாரம்பல), காலஞ்சென்ற அன்னலிங்கம், ஞாணேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியப்பிரசாத், கஜலக்க்ஷன், ரனுஜென்(பிரான்ஸ்), சுவாதி, சுவேகா, சுஜிதன்(நோர்வே), ரொசானா, சுஜினா(சுவிஸ்), பிரனீஷ், ப்ரீதிவிகா, பவிக்கா(லண்டன்), சனுஜா, வினுஷன், ஹரிஷ்(யாழ்ப்பாணம்), கபினாஷ், கிஷோனா, அக்ஷிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் மண்கும்பான் மேற்கு 5ஆம் வட்டாரத்தில் 10/Oct/1951 இல் திரு திருமதி செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு.சிவலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் வீரசிங்கம், இந்திரசித்து, தங்கமலர், சிவபாதலிங்கம், மல்லிகாதேவி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி ஐயம்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அருமைப் புத்திரி யோகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பரிமளா, சியாமளா, கோமளேஸ், நிரஞ்சலா, சிவரஞ்சினி, அஜந்தா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பண்பாக வளர்த்து சிவநேசன், சுரேஸ்குமார், பாலசிங்கம், சிவதாஸ், ஆனந்தன், ஜெகானந்தன் என்பவருக்குத் திருமணம் முடித்து வைத்து அழகுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் செல்லையா சிவலிங்கம் நகைமாடம் வைத்து நடத்தி அழகிய கலைவனப்புடைய நகைகளை உருவாக்கிய சிந்தனையாளர். கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.06.2019 இல் 67 வயதில் யாழ்ப்பாணம் அத்தியடியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
நினைவுகளை நெருடும் நீங்காத் துயர்!
சிவந்த வாய்ச் சிரிப்பும்
செஞ் சிகப்புப் பொட்டும்
கவர்ந் திழுக்கும் குணமும்
கள்ள மில்லா மனமும்
எவர்க்கும் உதவும் பரிவும்
எளிமையான நடையும்
உவந்து வாழ்ந்த மனிதா
உன்னையும் இழந்தா போனோம்?
காற்றிலே மிதக்கும் சருகாய்
கண்முன் உலவித் திரிந்தாய்
ஊற்றிலே ஊறும் அன்பால்
உள்ளங்கள் எங்கும் நிறைந்தாய்
நேற்றும் நீ இயல்பாய் தானே
நிமிர்ந்து நீ நடந்தாய் இருந்தாய்
கூற்றுவன் வந்து உன்னைக்
கூப்பிட கிடந்தாய் போனாய்!
மண்கும்பான் மண்ணில் என்றும்
மங்கிடா நாமம் இங்கே
மண்பற்றோடு என்றும் வாழ்ந்த
மாசற்ற நெஞ்சம் ஐயோ
கண்பட்டுப் போனது போல
இராத்திரி கிடந்த சீமான்
கண்வெட்ட மறந்தே போனார்
கண்டவர் கலங்க வானார்
வர்த்தகப் புள்ளி நகை
வாணிபத் தொழிலில் அன்று
விற்பனைச் செல்வர் என்றே
விளங்கிய ஒருவர் சிவலிங்கம்
பொற்தொழில் விட்டு ஓய்ந்து
பொழுதினை இனிமை யாக
உற்றவ ரோடு கழித்த
உத்தமா எங்கே போனாய்?
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

