ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா சிவசுப்பிரமணியம்

வயது 855 மே, 1934 – 22 அக்டோபர், 2019

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீசன்(பரிஸ்), ஜெகரூபன்(லண்டன்), ஜெகதாசன்(பரிஸ்), ஜெகபவானி(சுவிஸ்), ஜெகசீலன்(சுவிஸ்), ஜெககௌரி(கனடா), சர்மிலா(வல்வெட்டி), ஜெகதாஸ்(வல்வெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநந்தினி(பரிஸ்), சாந்தினி(லண்டன்), சுகந்தினி(பரிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), பத்மரஜனி(சுவிஸ்), பாலேந்திரன்(கனடா), சுதாகர்(வல்வெட்டி), கவிதா(வல்வெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பறுவதம்(வல்வெட்டி), கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஸ்வினி, மிலானி, திவ்வியா, ரூசாந், தமிழ்ச்செல்வன், தனுசன், துவாரகா, நிசாந், ஆகாஷ், அனுஷ்கா, நிதர்சன், விதுஷன், சயிதன், பர்மிசன், காரூண்ஜன், கபீசன், மயூசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Hindus School Lane, வல்வெட்டி, வல்வெடித்துறை என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

வாழ்வில் அனைவரோடும் அன்பாக பழகுபவரான செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வாணிபம் செய்த இடமும், கடலுணவு, பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறையில் 05/MAY/1934 ஆம் ஆண்டில் திரு.திருமதி செல்லையா வள்ளியம்மை தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் பிறந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அன்பும் அழகு நிறைந்த இவர் பறுவதம், கந்தையா போன்ற சகோதரர்களுடன் ஓடி ஆடி விளையாடி குறும்புகள் செய்து வளர்ந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர். அரசாங்க ஊழயராக பணியாற்றி வந்த இவர் திரு.திருமதி வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளான கமலாதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார்.

இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக ஜெகதீசன், ஜெகரூபன், ஜெகதாசன், ஜெகபவானி, ஜெகசீலன், ஜெககௌரி, சர்மிலா, ஜெகதாஸ் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, செல்வநந்தினி, சாந்தினி, சுகந்தினி, மணிவண்ணன், பத்மரஜனி, பாலேந்திரன், சுதாகர், கவிதா என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து, அஸ்வினி, மிலானி, திவ்வியா, ரூசாந், தமிழ்ச்செல்வன், தனுசன், துவாரகா, நிசாந், ஆகாஷ், அனுஷ்கா, நிதர்சன், விதுஷன், சயிதன், பர்மிசன், காரூண்ஜன், கபீசன், மயூசன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும், அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 22.10.2019 இல் 85 வயதில் வல்வெட்டித்துறையில் வயது முதிர்வின் காரணமாக இறையடி எய்தினார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.