மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தங்கவேல்
வயது 6826 ஆகஸ்ட், 1952 – 3 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தங்கவேல் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, அன்னபூரணம்(தங்கக்குட்டி) தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற அய்யாத்துரை, செல்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபன், ரமணன், கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, பானுசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிவராசா(இலங்கை), சந்திரமலர்(இலங்கை), ரஞ்சினி(கோமதி- இங்கிலாந்து), லோகேஸ்வரன்(அப்பன்- பிரான்ஸ்), யோகராசா(குமார்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுபாஸ், பாபு, தேவிகா, லில்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புனிதா(மாலா- இலங்கை), கலாரதி, லதாயினி, சிறி மோகனவேல் ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஆனந்தி அவர்களின் உடன் பிறாவாச் சகோதரரும்,
கருணாகரன், கௌரீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்
ஜித்தன், டிலக்சினி, ரிசி, சரண், காசினி ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03.15 மணிக்கு லங்காசிறியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 30 ஆட்களுக்கு மட்டும்அனுமதி உள்ள படியால் பதிவு செய்யப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்பதைமிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன். அனுதாபம் தெரிவிக்க விரும்புவர்கள்அறிவித்தலுக்கு கீழ் உள்ள இணைப்பில் உங்கள் அனுதாபத்தை பதிவு செய்யலாம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

