நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா புஸ்பராசா
வயது 839 மார்ச், 1936 – 15 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி தர்மபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா புஸ்பராசா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
திரு. செல்லையா புஸ்பராசா அவர்கள் தர்மபுரத்தின் மூத்த உறுப்பினராவார். 1958ல் காலடி வைத்ததில் இருந்து அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியன
இக்கிராமத்திற்கு வைத்தியசாலை அமைத்து இன்று அனேக வசதிகளுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரம் அ.த.க பாடசாலை இல.1 அமைத்ததற்கு காணிபெற்றுக் கொடுத்து இன்று பாடசாலை நல்ல நிலையில் வளர்ந்து வருகிறது. கிராம அபிவிருத்திக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்ற வகையில் தலைவராக செயற்பட்டு ஒரு மண்டபம் அமைத்து பின் பொதுநோக்கு மண்டபம் அமைத்து இன்று சிறப்பாக நிகழ்வுகள் நடைபெறக்கூடியதாக இருக்கிறது.
முழுக் கதையையும் வாசிக்க
1962ல் பிரதான வீதிக்கு அருகாமையில் பொதுச்சங்கங்கள் அமைத்தமை, ஆட்கள் இல்லாத காணியில் 1/2 ஏக்கர் திரு. சத்தியசீலன் அரச அதிபரிடம் உதவி பெற்று வளர்மதி முன்பள்ளி U.N.Dp மூலமாக கட்டியம் அமைத்து இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருந்தமை, அத்துடன் விஸ்வமடு மன்னன் தங்கராசாவின் துணைவியிடம் தர்மபுரத்தில் உள்ள அவர்களது காணியில் 1/2 ஏக்கர் பெற்று கட்டிடம் அமைத்து ஆறுமுகநாதன் முன்பள்ளியை அமைத்தமை, தர்மபுரக் கிராமத்திற்கு பொலிஸ்நிலையம் அமைத்து ஒழுங்கான முறையில் சிறப்பான சேவையாற்ற உதவியமை, 1959ம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான சமூக சேவைகள் ஆற்றி 58வது வயதில் சமாதான நீதவானாக இன்று வரை சேவையாற்றிக் கொண்டிருந்தார்.
பிரதேச சபை உறுப்பினராக இருந்த காலத்தில் வீதியின் முக்கிய பாலங்களை அமைத்து கோயில் கட்டிடங்களை நிறைவேற்றியமை, கிராமத்திற்கு அளப்பறிய சேவை ஆற்றியவர், இன்று மீளாத்துயில் கொள்ளும் நிலைகண்டு கதிகலங்கி நிற்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

