நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா இராசலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 825 மே, 1937 – 13 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி கட்டுவனில் 05/MAY/1937 இல் செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனாக இராசலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் இராமச்சந்திரன், மனோன்மணி, இராஜரத்தினம், நேசமணி, இராஜேஸ்வரி, பாலசந்திரன், ரஞ்சினிதேவி போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அருமை மகள் செல்வநாயகி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து நிர்மலா எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து இராஜேந்திரசிங்கம் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து இரஜீவன், பிரியங்கா, கிரிஷாந்தன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்கு படித்து ஆசிரியராக சேவையாற்றி ஓய்வு பெற்றது மட்டுமல்லாது நுண்ணறிவுத் திறன் கூடியவராகவும், நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.09.2019 இல் 82 வயதில் கொழும்பில் உள்ள தெஹிவளையில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"ஆசிரியப் பணியை அன்புடன் ஏற்று
காசினி சிறக்க கடமையை கண்ணாக்கி
ஆசிகள் பல அள்ளி வளங்கிய
நேசித்த உறவே பாச உள்ளமே
ஊசி அளவும் சொர்வின்றி உழைத்து
காசினியை விட்டு கண்கலங்க பிரிந்தீரே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

