கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லமாணிக்கம் கணேசலிங்கம்
வயது 6016 டிசம்பர், 1958 – 23 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Rorschach, Basel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach, Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லமாணிக்கம் கணேசலிங்கம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
நல்லூர் மண் பெற்றெடுத்த நாயகனே கணேசா!
காலன் கவர்ந்த செய்தி மேதினியில்
கேட்கையிலே மேனியெல்லாம் நடுங்குதையா கணேசா!
செல்லமாணிக்கம் தம்பதிகள் பெற்றெடுத்த
மாணிக்க மணிமகுடமே கணேசா!
அன்பால் அரவணைத்து பண்பால் பழகி
அனைவரையும் கொள்ளைகொண்ட கணேசா!
காணுமிடமெல்லாம் கனிவான புன்னகையை
உன் உதட்டினிலே சிந்துவாயே கணேசா!
பாரினிலே மற்றவர் குறைகாணா மாணிக்க மகுடமே கணேசா!
காலத்தால் அழியாத காவிய நாயகனே கணேசா!
காலமெல்லாம் காத்திருப்போம் இப்புவியில்
உன் நாமம் உள்ளவரை கணேசா!
சிரித்த முகமும் சீர் கொண்ட பார்வையும்
கனிவான பேச்சும் கம்பீரத் தோற்றமும்
உன் அடையாளமே கணேசா!
வருவாய் என்று பேரப்பிள்ளைகள் பார்த்திருக்க
அப்பா எங்கே என்று உன் செல்லப்பிள்ளைகள் காத்திருக்க
அன்பு மனையாள் உன் வரவைத் தேடி நிற்க எங்குதான்
சென்றாயோ மாணிக்க மகுடமே கணேசா!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு
அன்னாரின் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுக்கும்
மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த மனக்கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
றோசாக், கோல்டாக், றோசாக் பேர்க் வாழ் தமிழ்மக்கள் சார்பில்
— தமிழ்ச்சங்கம்- றோசாக்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூரில் 16/DEC/1958 இல் திரு.திருமதி செல்லமாணிக்கம் ரேவதி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனாக திரு.கணேசலிங்கம் அவர்கள் நாகராணி, செல்வராணி, உதயராணி, ஜெயராஜ், கதிர்காமலிங்கம், ரஞ்சினி, சாந்தினி போன்ற சகோதரங்களுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் சாந்தினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கார்த்திகா, சோபிகா, கீர்த்திகா, ஐஸ்வர்யா எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து து.ரமேஸ்,சு.ரமேஸ்,சிவனுஜன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து அருனியா, தாரேஸ், செமாரா மகாலட்சுமி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.08.2019 இல் 60 வயதில் சுவிஸ்ஸில் உள்ள Basel நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
நல்லூர் மண்ணின் வந்துதிர்த்த நல் மனமே
வல்ல குணம் படைத்த எங்கள் தந்தையே
பேசக் கற்றுத் தந்த குருவேவாழ வழிகாட்டி
சாவைத் தழுவிய உம் உயிரே
வார்த்தைகள் இல்லை உமை வர்ணிக்க
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

