1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லம்மா இராசையா
வயது 8821 மே, 1930 – 20 மே, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், Dortmund
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியயைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர
உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பெறாமக்கள், சகோதரிகள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 10ஆம் வட்டாரம் வீராமலையில் கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்பு மகளாக செல்லம்மா அவர்கள் 08/MAY/1930 ஆம் ஆண்டில் இவ் அவனியில் இராசலெட்சுமி, அன்னலெட்சுமி, மகாலெட்சுமி, யோகேஸ்வரி எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் சண்முகம் செல்லாச்சி தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான இராசையா என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து யமுனா, மாலினி, சதீஸ்குமார் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து சிவபாதசுந்தரம், இந்திரகுமார் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமியாக குறையின்றி கடமைகளை ஆற்றியதுடன் பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு. சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 20.05.2019 இல் 89 வயதில் பிரான்ஸில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"புங்குடு தீவில்
......புகழுடன் வாழ்ந்து
புது வசந்தமாக
......புதுமைகள் பரப்பி
அறிவுரை கூறி
......அகம் மகிழ்ந்து
அன்புடன் வாழ்ந்த
......ஆருயிரே எங்கே போனீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

