நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா சண்முகலிங்கம்
இளைப்பாறிய லிகிதர்- பரமேஸ்வரா கல்லூரி, முத்துத்தம்பி வித்தியாலயம், செங்குந்தா இந்து கல்லூரி
வயது 8614 மே, 1933 – 28 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் குடும்ப தலைவரின் மரணச்செய்தியை கேட்டு ஓடோடி வந்து உதவி ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், உறவுகளின் வீடுகளுக்கு எடுத்துச் சென்ற இணையத்தளங்களுக்கும், துயரத்தை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், மற்றும் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய இடமும் ஆறுமுகநாவலர் சமயம் வளர்த்த பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் நல்லூரில் 14/MAY/1933 இல் திரு.திருமதி செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனாக திரு.சண்முகலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சொக்கலிங்கம், நாகேஸ்வரி, சுந்தரலிங்கம் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் நல்லைநாயகி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கண்ணன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து தர்ஷினி என்பவரை திருமணம் முடித்துவைத்து மீரன், மிதுனன், மயூரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பரமேஸ்வரா கல்லூரி, முத்துத்தம்பி வித்தியாலயம்,செங்குந்தா இந்துக்கல்லூரி போன்றவற்றில் லிகிதராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளை,பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.08.2019 இல் 86 வயதில் பிரான்ஸில் உள்ள Drancy நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
கல்வியில் சிறந்த
கருணை லிகிதரே
வில் போன்ற
கூரிய அறிவுடைய மகானே
எல்லையில்லா அன்பு கொண்ட
எங்கள் அப்பாவே
உங்கள் பேரப்பிள்ளைகள் தவிக்க
எங்கே போனீர்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

