மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா கனகலிங்கம்
Former Silverline Park House Owner, முன்னாள் களஞ்சிய பொறுப்பாளர், புல்மோட்டை இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம், சைனா வே. திருகோணமலை
வயது 7516 ஜூன், 1942 – 19 மார்ச், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு உணாப்பிலவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கனகலிங்கம் அவர்கள் 19-03-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, சின்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற கனகசபை, பார்பதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிறேமானந்தன், விஷ்ணுராஜ்(கனடா), மிதிலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூங்கோதை, பத்மநாதன் மற்றும் பாலசிங்கம்(முன்னாள் களஞ்சிய பொறுப்பாளர்- இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனம், புல்மோட்டை), இராஜேஸ்வரி(கனடா), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன்(கனடா), நிரோஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜயலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியை, கனடா), பாக்கியலட்சுமி(வவுனியா), கணேசன்(வவுனியா), கைலாயநாயகி(வவுனியா), காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், நவமணி மற்றும் அருள்வரதன்(உணாப்பிலவு), காலஞ்சென்ற மயில்வாகனம், தனலட்சுமி, செல்வரட்ணம், துரைராஜா(கனடா), காலஞ்சென்ற குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இஷா(கனடா) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வட்டுவாகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

