ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லப்பா அமிர்தலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லப்பா அமிர்தலிங்கம்

B.sc(Lond), இளைப்பாறிய பௌதீகவியல் ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி, இளைப்பாறிய உப அதிபர்- இந்துக் கல்லூரி உரும்பிராய்

வயது 856 ஜனவரி, 1934 – 29 ஜூன், 2019

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
கந்தர்மடம், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா அமிர்தலிங்கம் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆனந்தர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

லதா, அருணன், கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பிரபாகரன், கேதாரநாயகி, ஜெயலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதிதா, தினேஷ்கரன், விசாகசரன், கெளசிகன் ஆகியோரின் அன்பு பேரனும்,

இந்திராணி, இந்திரசேனன், இரவீந்திரன், நகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 8:30 மணி முதல் பி.ப 07:00 மணி வரை பொரளை ஐயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு. 03-07-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

கிளிநொச்சியில் பசுமை நிறைந்த நெல்வயல்களைக் கொண்ட அழகிய இடமும், அதிகம் படித்த மக்களைக் கொண்ட பிரதேசமான பூநகரி நல்லூரில் 06/Jan/1934 இல் திரு திருமதி செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி ஆனந்தர் செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரி மீனலோஜினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து லதா, அருணன், கீதா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து பிரபாகரன், கேதாரநாயகி, ஜெயலிங்கம் என்பவருக்குத் திருமணம் முடித்து வைத்து நிவேதிதா, தினேஷ்கரன், விசாகசரன், கௌசிகன் போன்ற அழகுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்கு படித்து B.SC(LOND)பட்டம் முடித்த இவர் இராமநாதன் கல்லூரியில் பௌதீகவியல் ஆசிரியராகவும், உரும்பிராய் இந்துக்கல்லூரியில் உப அதிபராகவும் கடமையாற்றி ஓய்வினைப் பெற்ற இவர் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.06.2019 இல் 85 வயதில் கொழும்பு நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கல்வியில் சிறந்த
காலத்தின் மங்கா ஒளியே
செல்லமாய் பேசி
செந்தமிழில் உரையாடி
வெல்லம் போல் தித்தித்து
விடைபெற்றீரே

பிற அறிவித்தல்கள்

  1. 30 ஜூலை, 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.