ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்தம்பி சரவணமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்தம்பி சரவணமுத்து

வயது 8016 அக்டோபர், 1938 – 16 ஜூலை, 2019

பிறந்த இடம்
மண்கும்பான்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் செட்டித்தெரு நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சரவணமுத்து அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானை, சோதியம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கலையரசி, சாந்தி(கனடா), யேந்தி(ஜேர்மனி), சந்திரா(ஜேர்மனி), வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறிகிஸ்ணகுமார்(கோபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிகந்தராயா(சிறி- கனடா), பாஸ்கரன்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), சுரேந்திரகுமார்(சுரேன் -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், தர்மலிங்கம், இராசமணி, தேசிங்குராசா மற்றும் பவளம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தையா, சரஸ்வதி வெள்ளச்சாமி, இராசலட்சுமி, பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான இராசையா, சுப்பிரமணியம், யோகம்மா, செல்லமுத்து, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாளினி, கீர்த்தன், அபர்ணா, கார்த்திகைதீபன்(கார்த்தி), அன்பு, ஜீவா, திவ்வியன், கார்த்திகா, சகானா, சங்கீதா, சுஜி, சூரியா, சோனியா, றஜீ, டினேஸ்குமார்(கோபி), றயீத்குமரன், அரிகரன், இளஞ்செழியன், கீர்த்தனா, ஜெஜிதா(கீதா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ். மண்கும்பானில் புகழ் பூத்த சீமான் திரு.செல்லத்தம்பி அவர்தம் பாரியார் அன்னம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 16/OCT/1938 ஆம் ஆண்டில் திரு.சரவணமுத்து அவர்கள் இரத்தினம், தர்மலிங்கம், இராசமணி, தேசிங்குராசா, பவளம் எனும் அன்பு உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி வைத்தியலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகள் தெய்வானை, சோதியம்மா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கலையரசி, சாந்தி, யேந்தி, சந்திரா, வசந்தி, சிறிகிஸ்ணகுமார் போன்ற அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து சிறிகந்தராயா, பாஸ்கரன், சுரேந்திரன், சுரேந்திரகுமார் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து சாளினி, கீர்த்தன், அபர்ணா, கார்த்திகைதீபன், அன்பு, ஜீவா, திவ்வியன், கார்த்திகா, சகானா, சங்கீதா, சுஜி, சூரியா, சோனியா, றஜீ, டினேஸ்குமார், றயீத்குமரன், அரிகரன், இளஞ்செழியன், கீர்த்தனா, ஜெஜிதா எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அர்சுனன் என அன்பாக அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரபிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 16.07.2019 இல் 80 வயதில் நல்லூரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"சூரிய வதனம்
......சுடர்விடும் எண்ணம்
காரியம் தனை
......கச்சிதமாய் திட்டமிட்டு
வாரி வழங்கும்
..... வள்ளல் உறவே
பாறி வீழ்ந்தீரே
.....பாச உறவே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.