ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்துரை பொன்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை பொன்னையா

வயது 6520 மார்ச், 1954 – 23 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
கொடிகாமம்
வாழ்ந்த இடம்
Siegen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Siegen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பொன்னையா அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கொடிகாமம் ஆயுர்வேத வைத்தியர் செல்லத்துரை வல்லவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லூர் ஆயுர்வேத வைத்தியர் சீனிவாசகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிகமலாம்பிகாதேவி(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சர்மிளா(ஜேர்மனி), வாசுகி(டிலா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணன்(ஜேர்மனி), விபுலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, ரிஷிஆரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தங்கலட்சுமி(இலங்கை), சிவகுருநாதன்(லண்டன்), கந்தசாமி(ஹொலண்ட்), வடிவாம்பிகை(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), தில்லைநாதன்(லண்டன்), இந்திராதேவி(இலங்கை), இலிங்கநாதன்(லண்டன்), மங்கையற்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி(இலங்கை), காலஞ்சென்ற சுதாங்கினி, சுதாநந்தினி(அவுஸ்திரேலியா), சுபாகரன்(இலங்கை), சுகந்தன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயந்தன், துஷிதா(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(இத்தாலி), மகிந்தன்(லண்டன்), சுதர்சன், குணசீலன், குணபாரதி(இலங்கை), குணதீபன்(இலங்கை), குணவானதி(லண்டன்), மீரா(இலங்கை), அகிலன்(ஜேர்மனி), கஜன், கௌசிகன், பபுஜன், கௌசிகா ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,

காலஞ்சென்ற செல்வத்துரை, மீனா, சித்திரா, கந்தசாமி, குணசேகரம், ஜெகசோதி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, ஜெயந்தி, காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(ரவி), சிறிவாளாம்பிகாதேவி, சிறிமகாதேவன்(இலங்கை), சிறிவாமதேவன்(ஜேர்மனி), சிறிகுகதேவன்(சுவிஸ்), சிறிநகுலாம்பிகாதேவி, சிறிவிமலாம்பிகாதேவி, சிறிரகுதேவன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்தானகோபால், அழகம்மா, விமலாதேவி(ரூபி), சந்திரா, பாலகிருஸ்ணன், லகுசியாமா ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சாந்தினி(லண்டன்), அமுதா(லண்டன்), தர்ஷன்(ஹொலண்ட்), பிரியதர்ஷினி(ஹொலண்ட்) காலஞ்சென்ற நிரோஷன்(ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

திவாபரன்(லண்டன்) அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட கொடிகாமத்தில் 20/MAR/1954 இல் கொடிகாமம் ஆயுர்வேத வைத்தியரான திரு.திருமதி செல்லத்துரை வல்லவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.பொன்னையா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தங்கலட்சுமி, சிவகுருநாதன், கந்தசாமி, வடிவாம்பிகை, ஞானேஸ்வரி, தில்லைநாதன், இந்திராதேவி, இலிங்கநாதன், மங்கையற்கரசி எனும் சகோதர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், நல்லூர் ஆயுர்வேத வைத்தியரான திரு.திருமதி சீனிவாசகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகள் சிறிகமலாம்பிகாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சர்மிளா,வாசுகி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரமணன்,விபுலன் என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சகானா, ரிஷி, ஆரியன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் Dr.Pons என்று அழைக்கப்படும் இவர் வைத்தியராக நல்ல சேவையாற்றியதுடன்,நல் அறிவுரைகள் வழங்குவதில் திறமைசாலியும்,நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும் விளங்கிய இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.08.2019 இல் 65 வயதில் ஜேர்மனியில் உள்ள Siegen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அழகிய உருவே அறிவுரை நாயகனே
கல்வியில் சிறந்த வைத்திய தெய்வமே
நண்பர்கள் சூழ நகைச்சுவை பொழிந்து
இன்பங்கள் தரும் இனிமை உறவே
எங்கே போனீர் எமைப் பிரிந்து
அன்பு மனம் தவிக்க அனைவரையும் பிரிந்தீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.