31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை புவனேஸ்வரி
வயது 692 மார்ச், 1941 – 3 மார்ச், 2010
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Trichy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇலங்கை, யாழ்ப்பாணம், 2ம் குறுக்குத்தெரு,பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் இலக்கம் 14, 1ம் குறுக்குத்தெரு,ரெங்க நகர்(கே.கே.நகர்) திருச்சி, தமிழ்நாட்டை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை புவனேஸ்வரி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்.
" எங்கள் குடும்ப விருட்சத்தைப் போற்றி வளர்த்து
அன்பின் அடித்தளமாய் அமைந்து, ஒளி விளக்காய்
எமக்கு வழிகாட்டி அன்போடும், பண்போடும்
பெருமையுடனும் எமைப் பேணிக்காத்து
எம்மை நல்வழி நடாத்தி தெய்வத்துள் சரணடைந்த
எம் குடும்ப குலவிளக்கே"!
ஆறுவதற்கு நீங்களில்லை அமைதியுண்டா சொல்லம்மா - எமை
நீங்கள் பிரிந்து செல்ல மனம் உங்களுக்கு வந்தது ஏனம்மா?
பேச வார்த்தை வரவில்லை பாவம் செய்த ஜென்மம் நாமோ?
தாயவளே வருவீர்களா? இல்லையெனில் துயர்தானே,
நாதியற்று நாம் போனோம் நல்லவளே நீங்கள் எங்கே?
நலமின்றி நாம் வாழ முடியுமா சொல்லுங்கள் தாயே,
விதி உங்களை விளையாடியதா விடையெதுவும் தெரியவில்லையே,
வழியின்றித் தவிக்கின்றோம் விழிநீரைக் காணிக்கையாக்கி"
எங்கள் தெய்வத்தின் பேரிழப்புச்செய்தி கேட்டு உடன் ஓடி வந்து உதவிய உற்றார்கள், உறவினர்கள், நண்பர்களுக்கும், அம்மாவின் பிரிவால் வாடி நின்ற எங்களுக்கு நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியும், கண்ணீர் அஞ்சலி பிரசுரமும் வெளியிட்டோருக்கும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர் வளையங்கள், மலர் அஞ்சலி செலுத்தியோருக்கும், அம்மாவின் திருச்சி வீட்டிற்கும், ஏனைய பிள்ளைகளின் வீட்டிற்கும், சுவிசிலும், வெளிநாட்டிலும், இலங்கையிலும் தெய்வத்தின் உறவினர்களின் வீட்டிற்கும் நேரடியாகவும் தொலைபேசி மூலமும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், நாம் செய்வதறியாது திகைத்துப்போயிருந்த வேளையில் எமக்கு உணவு தந்து, தேநீர், மென்பானங்கள் வழங்கி உதவிகள் செய்த உற்றார்கள், உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும்,
அன்னையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும், இறுதிச்சடங்கு நடைபெற உதவி செய்து, "ஓயாமாரி" மயானம் வரை வந்து அன்னையின் உடல் தீயுடன் சங்கமமாகும் வரை, இறுதிவரை இருந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், வாகன வசதிகள் செய்த அனைவருக்கும், அன்னை மருத்துவமனையில் இருந்தபோது பகல் இரவு பாராது எங்கள் தேவை அறிந்து, ஓடி, ஓடி உதவியவர்களுக்கும், நாங்கள் அறியாவண்ணம் எங்களுக்கு தெரியாமல் பல உதவிகள் செய்த உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன் 01-04-2010 வியாழக்கிழமை அன்று இராமேஸ்வரத்தில் சபண்டீகரண கிரியைகள் நடைபெற்று, 02-04-2010 வெள்ளிக்கிழமை அன்று திருச்சி வீட்டில் இடம்பெறவுள்ள ஆத்ம சாந்திபிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். (இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்).
— ஈர விழிகளுடன்..... பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளகள், உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

