நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை இராசதுரை
ஓய்வுபெற்ற அதிபர்- யா/நாரந்தனை கணேச வித்தியாலயம்
வயது 9116 ஏப்ரல், 1928 – 20 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை, வட்டுக்கோட்டை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககடந்த 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்த எங்கள் அன்புத்தெய்வம் அமரர் செல்வத்துரை இராசதுரை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் கீரமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த ஊர்காவற்துறை நாரந்தனையில் 16/APR/1928 இல் திரு.திருமதி செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.இராசதுரை அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சகுந்தலையம்மா, பொன்ராசா, சரஸ்வதியம்மா, சுப்பிரமணியம், ஏகநாயகியம்மா போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி நாகமுத்து மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளான செல்வபாக்கியம் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவசக்தி எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து தில்லைநடராஜா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்கு படித்த இவர் உயர் நிலையாக யாழ்/நாரந்தனை கணேச வித்தியாலத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.08.2019 இல் 91 வயதில் வட்டுக்கோட்டை மேற்கில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
கல்வியில் சிறந்த கருணை உறவே
சொல் மழை பொழியும் சிறகே
நல் மனம் கொண்ட அறமே
கல் மனமற்ற கருணை உயிரே
வல்லவன் அடியின் வாசல் போனீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

