ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்துரை இரத்தினலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை இரத்தினலிங்கம்

வயது 825 டிசம்பர், 1936 – 26 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
கெருடாவில்
வாழ்ந்த இடம்
Newbury Park

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டமானாறு கெருடாவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரத்தினலிங்கம் அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமலர்(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

சோபனா, ரஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருச்செல்வம்(லண்டன்), இராஜ்மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலேந்திரா, லீலாவதி, சபாநாதன், இராமஜெயம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குலசிங்கம், கந்தசாமியார், இந்துமதி, செல்வராணி, விஜயலஷ்சுமி, இராமலிங்கம், கமலாதேவி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லதுஷா, திவ்யா, லக்‌ஷா, கிரிஷாந், கிஷோர், யுவாணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம் அமைந்துள்ளதும்,வாழைத்தோட்டம்,புகையிலைத் தோட்டம்,மரக்கறித்தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்/தொண்டமனாறு கெருடாவில் தெற்கில் 05/DEC/1936 இல் செல்லத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் இரத்தினலிங்கம் அவர்கள் பாலேந்திரா, லீலாவதி, சபாநாதன், இராமஜெயம், செல்வராணி ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அன்பும் பண்பும் நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதும் கந்தசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் அழகு நிறைந்த சோதிமலர் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சோபனா, ரஞ்சனா போன்ற அழகுப் பிள்ளைகளை பெற்று வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.

இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.04.2019 இல் 82 வயதில் பிரித்தானியாவில் உள்ள Newbury park நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அழகிய வதனம்
......அன்பு உள்ளம்
நற் பேச்சும்
......நற் குணமும்
ஒருங்குறப் பெற்ற
.....உத்தம ஆத்மா
உள்ளம் தவிக்க விட்டு
......உறங்கியது ஏன்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.