நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை செல்வராஜா
வயது 731 ஜனவரி, 1946 – 20 மே, 2019
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- Solingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது குடும்ப குலவிளக்கு சிவபதமடைந்த செய்திக் கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியை நடைபெற்றபோது நேரில் கலந்துகொண்ட அனைவருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொடர்புகொண்டு ஆறுதல், அனுதாபம் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள், பூமாலைகள் முதலினயவற்றைச் சமர்பித்த அன்பர்களுக்கும் பல்வேறு வழிகளில் எம்முடன் சேர்ந்து உதவி ஒத்தாசை புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த மட்டுவிலில்01/JAN/1946 ஆம் ஆண்டு செல்லத்துரை அம்மாகுட்டி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக செல்வராஜா அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தவரட்ணம், சிவநேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சின்னாயா ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்பு மகள் தேவசக்தி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து கோகுலசக்தி, சிவரூபன், தர்சிகா போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் றஞ்சித் நிலான், பிரபாகரன், யாழினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது மாமாவிற்குரிய கடமையை சிறப்பாக செய்ததுடன் சரண், ரிஷா, ஜோதி, நிலா, விஸ்ணு ஆகிய அற்புத பிள்ளைகளின் பேரனாக கடமை செய்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.05.2019 இல் 73 வயதில் ஜேர்மனியில் உள்ள Solingen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
மட்டுவில் மண்ணின்
......மங்காத ஒளியே
மரியாதை மனமுடன்
.......வாழ்ந்த செம்மலே
கண்ணாடி முகமும்
........புன் சிரிப்பும்
காலம் உள்ளவரை
......மறந்திடாது மனதில்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

