மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை தவநாயகம்
வயது 662 டிசம்பர், 1952 – 22 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- மண்கும்பான்
- வாழ்ந்த இடம்
- மண்டைத்தீவு 5ம் வட்டாரம், குளப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், மண்டைத்தீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு குளப்பிட்டி சந்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவநாயகம் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவராசா தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற அனுலா, கேதீஸ்வரன்(பிரான்ஸ்), வாசுகி(இத்தாலி), சதீஸ்வரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
நந்தினி, மன்மதராசா, கார்த்திகா, ஸ்ரீபவான், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணு, ஹரிஸ், பிரசன்னா, லவின், தனுசிகா, வினுசிகா, கீர்த்தனா, மாதேஸ், தனுசான், தக்சிகா, தாரிகா, சேரன், ஸ்ருதி, கவின், கவின் ஆகியோரின் அன்பு பேரனும்,
தேவநாயகம், செல்வநாயகம், கனகேஸ்வரி, சர்வேஸ்வரி, சிவநேசராசா, ஆனந்தலிங்கம், காலஞ்சென்ற சுதாகரன், பூலோகம், மனோகரன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவசக்திபாலன்(ஜீவா- இலங்கை) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் மண்கும்பானில் புகழ் பூத்த சீமான் திரு. செல்லத்துரை அவர்தம் பாரியார் செல்லம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 02/DEC/1952 ஆம் ஆண்டில் திரு.தவநாயகம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
தேவநாயகம், செல்வநாயகம், கனகேஸ்வரி, சர்வேஸ்வரி, சிவநேசராசா, ஆனந்தலிங்கம், சுதாகரன், பூலோகம், மனோகரன் போன்ற சகோதரர்களுடன் குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார். திரு.திருமதி தேவராசா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் தேவநாயகி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் இல்லற வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கமலேஸ்வரன், அனுலா, கேதீஸ்வரன், வாசுகி, சதீஸ்வரன் எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து நந்தினி, மன்மதராசா, கார்த்திகா, ஸ்ரீபவான், சிந்துஜா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து விஷ்ணு, ஹரிஸ், பிரசன்னா, லவின், தனுசிகா, வினுசிகா, கீர்த்தனா, மாதேஸ், தனுசான், தக்சிகா, தாரிகா, சேரன், ஸ்ருதி, கவின், கவின் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 22.10.2019 இல் 66 வயதில் கொக்குவில் மேற்கு குளப்பிட்டியில் இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

