மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை வைரமுத்து
முன்னாள் உரிமையாளர்- திருப்பதி ஹாட்வெயர்ஸ், ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
வயது 7524 ஆகஸ்ட், 1943 – 23 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வைரமுத்து அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை திருப்பதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை(விதானையார் 3ம் வாய்க்கால், பன்னங்கண்டி, பரந்தன்) சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற றிஜிகாந் மற்றும் ரவீந்திரநாத்(பொறியியலாளர்- லண்டன்), மிராளன்(Director Of Product Management, Ceymplon Private Limited) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனபாலசிங்கம்(லண்டன்), பரராஜசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சனா(கணக்காளர்- லண்டன்), காயத்திரி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், பளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாலினி(லண்டன்), புனிதராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வினி(லண்டன்), விதுஷன்(லண்டன்), நித்திஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வித்தியா(லண்டன்), யாழினி(லண்டன்), விஜிதா(லண்டன்), றஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

