1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா கனகையா
ஓய்வுநிலை அதிபர்- மு/புதுக்குடியிருப்பு விக்னேஸ்வர வித்தியாலயம்
வயது 8218 ஜூலை, 1936 – 20 மே, 2019
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா கனகையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவு தான் அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
பாசமாய் வளர்த்து பாரினிலே போற்ற
வழி காட்டினீர்கள் எமதருமை அப்பாவே!
ஓராண்டு அல்ல பல யுகம் கடந்தாலும்
ஏதோவொன்றாய் உனது வியாபகம் அப்பா
முன்நோக்கி ஓடுகின்ற காலத்தால் முடிவதில்லை
பின்நோக்கி ஓடுகின்ற நினைவுகள் நிறுத்த அப்பா
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்
பிரிவால் துயருறும் பாசமிகு
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
முல்லைத்தீவில் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், நெல்வயல்கள் வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புதுக்குடியிருப்பில் செல்லையா சின்னாச்சி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக கனகையா அவர்கள் 18/JUL/1936 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் பொன்னையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகள் சரஸ்வதி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சின்னத்துரை, சின்னம்மா, வேதநாயகி, சின்னத்தம்பி, நளாயினி, தர்மதேவி, பிரேமாதேவி, கருணாநந்தன், விபுலானந்தன், செல்லையா ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மு/ புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன், கடினப்பட்டு உழைத்ததுடன், எப்போதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.05.2019 இல் 82 வயதில் புதுக்குடியிருப்பில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கல்வியில் சிறந்த
......கடவுள் உள்ளமே
அதிபர் சேவையில்
.......அஞ்சாது உருகி
பாசம் காட்டி
.......பண்பாக மாற்றி
பாரில் உயர்த்தி
.......விடைபெற்ற உறவே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

