6ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா நடராஜா
வயது 8319 ஜூன், 1926 – 21 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாண்டு காலம் ஓடி மறைந்தாலும்
அன்பு எனும் பாசவலையை எம்மிடையே
ஊன்றி ஊற விண்ணிடை சென்றாலும்
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே ஐயா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
உன் உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
எமைக் காத்தாய்
ஆண்டாறு அழுது புரண்டாலும்
உங்கள் பிரிவுத் துயரம் நீங்காது ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

