மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா நவரட்ணம்
வயது 8712 ஏப்ரல், 1932 – 29 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை மேற்கு
- வாழ்ந்த இடம்
- பூநகரி, கொழும்புத்துறை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், பூநகரி, கொழும்புத்துறை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நவரட்ணம் அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற முத்துலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதரா(கனடா), சசிதரா(கனடா), கிரிதரன்(கனடா), காலஞ்சென்ற சுமித்ரா, வாசுகி(கனடா), காலஞ்சென்ற மதிவதனி, கிரிஷாந்தி(நோர்வே), துஸ்யந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னபூரணம், தர்மலிங்கம், இரத்தினம்(குஞ்சு), கனகரட்ணம்(சின்னராசா) மற்றும் மதியானந்தம்(பொம்மை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராஜன், சிறிகணேஷ், காலஞ்சென்ற பாலவிநாயகர், செந்தில்நாதன், கமலநாதன், கந்தகுமார், காலஞ்சென்ற நாகேஸ்வரி(கலா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுப்பிரியன், விரோஷி, கிஷோண், விஜுரா, சுபீட்சா, சார்மிலன், அபினாஷ், அபிலாஷ், சுவர்ணவர்ஷினி, திவாஜனி, மர்த்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் வடக்கில் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் மிகவும் அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான கொழும்புத்துறை மேற்கில் 12/APR/1932 ஆம் ஆண்டில் திரு.திருமதி செல்லையா மாணிக்கம் தம்பதிகளுக்கு சிரேஷ்ட மகனாக திரு.நவரட்ணம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் செல்லத்துரை, அன்னபூரணம், தர்மலிங்கம், இரத்தினம், கனகரட்ணம், மதியானந்தம் போன்ற சகோதரர்களுடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், அழகிய பெண்ணான முத்துலஷ்மி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக யசோதரா, சசிதரா, கிரிதரன், சுமித்ரா, வாசுகி, மதிவதனி, கிரிஷாந்தி, துஸ்யந்தி எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து, வசந்தராஜன், சிறிகணேஷ், பாலவிநாயகர், செந்தில்நாதன், கமலநாதன், கந்தகுமார், நாகேஸ்வரி போன்றோரைத் திருமணம் முடித்து வைத்து, தனுப்பிரியன், விரோஷி, கிஷோண், விஜீரா, சுபீட்சா, சர்மிலன், அபினாஷ், அபிலாஷ், சுவர்ணவர்ஷினி, திவாஜனி, மர்த்தினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.10.2019 இல் 87 வயதில் கனடாவில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

