மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சிவஞானசுந்தரம்
ஓய்வுபெற்ற உப அதிபர்- யாழ் வண்ணை நாவலர் மகாவித்தியாலயம்
வயது 8528 நவம்பர், 1933 – 24 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நீராவியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவஞானசுந்தரம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பியையா(தம்பிஐயா), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி(சறோ-Saroja) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கோவிந்தசாமி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, திருலோஜன், திருலோஜினி, சயந்தன், ஆதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவாகரன், யாழினி, தர்மசீலன், தமயந்தி, கௌதமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமேஸ்வரி, லக்ஷ்மி, மீனாம்பாள், கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற கருணாமூர்த்தி, விஜயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயவர்த்தன், நிரூபன், ஜவந்தி, வாகீஷ், பார்கவி, பைரவி, யுவன், வராகி, அகில், சக்திஸ்ரீ, சத்திஅருள் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் பெருமாள் கோவிலடியில் 28/NOV/1933 ஆம் ஆண்டில் திரு.திருமதி செல்லையா தங்கம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.சிவஞானசுந்தரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கோவிந்தசாமி, ராஜேஸ்வரி போன்ற சகோதரர்களுடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி தம்பிஐயா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளான தையல்நாயகி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக சிவாஜினி, திருலோஜன், திருலோஜினி, சயந்தன், ஆதீபன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, திவாகரன், யாழினி, தர்மசீலன், தமயந்தி, கௌதமி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து, ஜெயவர்த்தன், நிரூபன், ஜவந்தி, வாகீஷ், பார்கவி, பைரவி, யுவன், வராகி, அகில், சத்துஸ்ரீ, சத்திஅருள் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இவர் யாழ்/வண்ணை நாவலர் மகாவித்தியாலய உப அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.10.2019 இல் 85 வயதில் யாழ்.நீராவியடியில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

